சிப்பிக்குள் மழைத்துளிகள் சிதறாமல் விழுந்தாலும் ஒருதுளி மட்டுமே ஒற்றைமுத்தாய் உருவாகும்! என் இதய சிப்பிக்குமட்டும் ஏனோ ஓர் அற்புதம் விழுந்த மழைத்துளிகளெல்லாம் வீரிய முத்துக்களானது
சனி, 23 நவம்பர், 2013
ஞாயிறு, 3 நவம்பர், 2013
ஆலிம்கள்(கவிதை)
- ஆலிம்கள் ************************* இறைக்கல்விப் பயிலவரும் இறைநேசச் செல்வர்க்கு இன்னல்கள் ஏதுமில்லா இன்பம்தரும் படுக்கைகள் ! புயல்காற்று அடித்தாலும் புவிநகர்ந்து போனாலும் புரியாமல் படித்திடவே புதியஅடுக்கு மாளிகைகள் படிப்பதில் சோர்வுவந்து பலம்குன்றிப் போகாமல் பரிவோடு எமைக்காக்க பக்குவமாய் உணவுவகைகள்! உளச்சுத்தம் மட்டுமின்றி உடல்சுத்தம் வேண்டுமென்று உளநிறைவாய்க் குளித்திடவே உருப்படியாய் குளியலறைகள்! அறிவார்ந்த பாடங்களை அகந்தனிலே ஏற்றுக்கொண்டு அசதியாய் வருவோர்க்கு அசத்தலாய் மின்விசிறிகள் வசதிகளை சொல்லப்போனால் வரிகள்மட்டும் நீண்டுபோகும் வசதியுள்ள சீமான்போல வளர்ந்துவரும் இளம் ஆலிம்கள்! இன்றுபோல அன்றும்கூட இளம் ஆலிமாய் வாழ்ந்தவர்கள் இன்னலில்லா வாழ்க்கையையா இசைந்தார்கள் திரும்பிப்பார்ப்போம் "சீனதேசம் சென்றாகினும் சீரியகல்வி தேடு" என்ற சீமான்நபி மொழியைமட்டும் சீதனமாகக் கொண்டவர்கள் உற்றார் உறவினர்களை உடன்பிறந்த சகோதரர்களை உள்ளங்கால் செருப்புபோல உதறிவிட்டுப் போனவர்கள் தம் காலே பேரூந்தாய் தளைகலே தம் உணவாய் தனிமையில் நாடுகடந்து தன்னம்பிக்கையோடு வந்தவர்கள் அனல்பறக்கும் வெயிலானாலும் அசரவைக்கும் மழையானாலும் அரச மர நிழல்-இவர்கள் அசையாத மாளிகைகள் வசதிகளை என்னிப்பார்த்தால் வசதியில்லா பாமரர்கள் வள்ளல்நபி வழிநடக்கும் வாகைநபி வாரிசிவர்கள்! -ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவி
வெள்ளி, 1 நவம்பர், 2013
TAKE IT EASY......BY HAZARTH S FAKRUDEEN BAQAVI-TAMIL BAYAN
http://www.youtube.com/v/i7B55q6_yBI?version=3&autohide=1&feature=share&autohide=1&attribution_tag=ixOZRlssBsqEiB9n6MFcmA&showinfo=1&autoplay=1
விடியல்
விடியல் ஐயகோ வீறுகொண்ட சமுதாயம் வீழ்ந்து கிடக்கிறதே! "அலிஃப்" எழுத்தைப்போல் தலை நிமிர்ந்த சமுதாயம் "லாம்" எழுத்தைப்போல் வளைந்து கிடக்கிறதே! உண்மையெனில் முஸ்லிம் உயர்வெனில் முஸ்லிம் உழைப்பெனில் முஸ்லிம் உத்தமமெனில் முஸ்லிம் எனும் நிலைமாறி பொய்யெனில் முஸ்லிம் புரெட்டெனில் முஸ்லிம் களைப்பெனில் முஸ்லிம் களவெனில் முஸ்லிம் எனும் நிலை ஏனோ? விடியலுக்காய் வரும் சூரியன் மாலையில் மறைவதுபோல் விடியலுக்காய் வந்த சமுதாயம் காரிருளில் மறைந்ததேனோ? யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே இஸ்லாமிய சமூகத்தை நாங்களும் பார்க்கிறோம் அதனால் தான் உண்மைவீரம் விலைபோய்விட்டது என்றொரு கூட்டம் ஈமானில் ஒளியில்லை-என மற்றொரு கூட்டம் வாலிபர்கள் சரியில்லை என்றொரு கூட்டம் நாகரிகமே நம்மைநாசமாக்கியது-என மற்றொரு கூட்டம் இப்படி வீழ்ச்சிக்கு வழிசொல்ல வீதியெல்லாம் ஆளுண்டு வாழ்க்கைக்கு வழிசொல்ல வாகையாய் யாருண்டு? வாலிபர்கள் படையின்றி வலியினால் தவிக்கிறோமா? இல்லையில்லை குடும்பக்கட்டுப்பாடு செய்யுமளவு குழந்தைகள் நமக்குண்டு பொருளாதரக் குறைவினால் பொலிவிழந்து போனோமா? இல்லையில்லை திருவிழாபோல் திருமணம்நடத்த கட்டுக்கட்டாய் பணமுமுண்டு. என்ன செய்ய? வாலிபர்களை வழிநடத்த வாட்டமுள்ள தலைவனில்லையே! தலைவன் நடந்துவர தொண்டன் சவாரிசெய்தபோது காரிருள் அகன்று
விடியல் பிறந்தது தலைவன் பவனிவர தொண்டன் சவாரியானபோது கிடைத்த விடியல் அகன்று காரிருள் மொய்த்தது! வீறுகொண்ட சமுதாயம் வீழ்ந்து கிடக்கிறதே நல்ல தலைவனுக்காய் நாளும் தவம்செய்கிறதே! -ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)