வீணேதான் **************** பழம்கொடுக்கா மரமெல்லாம் நிழத்தில்நிற்பது வீணேதான் ! ஒளிசிந்தா விளக்கெல்லாம் வழியிலிருப்பது வீணேதான் ! காற்றுகொடுக்கா மின்விசிறி மாற்றாயிருப்பது வீணேதான் ! மையில்லா பேனாக்கள் பையிலிருப்பது வீணேதான் ! கருத்தில்லா புத்தகங்கள் பருத்திருந்தும் வீணேதான் ! மானம்மறைக்கா உடையெல்லாம் உடலிலிருந்தும் வீணேதான் ! இறைவணங்கா அடியார்கள் இம்மையிலிருப்பது வீணேதான் ! கா(வல்)வித்துறையின் தாக்குதலுக்குப்பின் வாய்மூடியிருப்பது வீணேதான் ! 17-02-2014 அன்று இராமநாதபுரத்தில் PFI தொண்டர்கள்மீது கா(வல்)வித்துறை கொடீரத்தாக்குதல் நடத்தியபோது எழுதியது. ---ஃபக்ருதீன் ஃபாஸில் பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக