- பாகியாத்தில் ஓதும் காலத்தில் ""மை"" எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.அதை தலைமையேற்று நடத்தினேன்.அதில் "தலைமை"எனும் தலைப்பில்.................. தலைமை **************************** இது படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. இது ஓர் போதைப்பொருள் தொட்டு வாழ்ந்தவன் விட்டு வாழமாட்டான் ! இந்த"மை"யை ஒருவன் தொட நாட்டிலுள்ளோர் விரலில் மையிட வேண்டும் ! நாட்டின் போட்டியும்,பொறாமையும் இந்த "மை"யை அடைவதற்கே ! பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களிடமும் வரதட்சணை வாங்கும் கொடிய கயவனிவன். இவனை அடையத்தான் இலட்சமும்,கோடியுமாய் லஞ்சங்கள் ! இவனுடன் ஒத்துப்போக நினைப்பதால்தான் குடிசைகள் பத்திவைக்கப்படுகின்றன ! இவனுடன் உறவுகொள்ளத்துடிப்பதால்தான் மக்கள் பிரிவுபடுத்தப்படுகின்றனர் ! பெண்மைக்கு மயங்காதவனும் தலைமைக்கு மயங்குகிறான் ! பொய்மைக்கு கொடிகாட்டி உண்மைக்கு தயங்குகிறான் ! நபிகளாரும் தலைவரானார் தலைவனாய் வாழவில்லை தொண்டனாய் வாழ்ந்தார்கள் ! பகைவனாய் வாழவில்லை நண்பனாய் வாழ்ந்தார்கள் ! அந்-நிலையைப் பெற்றிடுவோம்! பொறாமையின்றி வாழ்ந்திடுவோம் !!! ஃபக்ருதீன் ஃபாஸில் பாகவி
வியாழன், 13 பிப்ரவரி, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக