பெண்மை *********************** நாங்கள் சில சமயம் போற்றப்படுகிறோம் "தாய்" என்று ! பல சமயம் தூற்றப்படுகிறோம் "பேய்" என்று ! சமுதாயம் எங்களைப் பார்ப்பது கற்சிலையாகத்தான் ! பார்த்துச்செல்ல ஆளுண்டு சேர்த்துச்செல்ல ஆளில்லை ! சமுதாயம் எங்களை பார்ப்பது அழகுசிலை பொம்மைகளாகத்தான் ! ஜோடித்துப்பார்க்க ஆளுண்டு ஜோடியாக்கிப்பார்க்க ஆளில்லை ! கடல்நீர் கரித்ததும் எங்கள் கண்ணீரால்தான் ! நீருக்காய் கையேந்தி நீர்த்துப்போகும் தமிழகமே ! எங்கள் கண்ணீருக்கு அணைபோடுங்கள் உங்கள் தண்ணீர்பஞ்சம் தீர்ந்துவிடும் ! காவிரி நதிநீரும் என்றாவது வற்றிவிடும் ! காவிரிபெண் கண்ணீரோ வற்றாமல் பாய்ந்துவரும் ! தண்ணீருக்காய்...... வீட்டுக்கொரு கிணறிருந்தது அன்று ! வீட்டுக்கொரு பெண்ணிருக்கிறாள் இன்று ! கலியுகக்காலம் முதல் கண்ணீரே வாழ்வானதால் கம்ப்யூட்டர் காலத்திலும் சென்னீரில் மூழ்குகிறோம் ! எங்கள் கவர்ச்சிக்கு அழையும் காமசமுதாயமே ! எங்கள் உணர்ச்சிக்கு எப்போது வழிகாணப்போகிறாய் ? சேய் அவள் பெண்ணானால் பேய் என கதறுகின்றீர் ! நாய் அது பெண்ணானால் நடுவீட்டில் அமர்த்துகின்றீர் ! நாய்க்களிக்கும் மரியாதை சேய்க்களிக்கா காலம்வரை வீட்டில் சுகமும் இருக்காது ! நாட்டில் இன்பம் நிலைக்காது ! ---ஃபக்ருதீன் ஃபாஸில் பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக